கல்லல் அருள்மிகு ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
25/10/2021 03:11:28pm.
சிவகங்கை மாவட்டம் கல்லல் நகரில் அமைந்துள்ள மிகப் பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன் சமேத ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றன, மிகப்பழமையான இத்திருக்கோவில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையொட்டி கும்பாபிஷேகம் நடந்தன இத்திருக்கோவிலில் விநாயகப் பெருமான் சுவாமி அம்மன் காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் அருள்பாலித்து வருகிறார்கள் கும்பாபிஷேக விழாவில் கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு அனைத்து தெய்வங்களுக்கும் யாக குண்டம் அமைக்கப்பட்டு கணபதி பூஜை பெண் யாக பூஜை தொடங்கியது தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது நிறைவாக கடம் புறப்பாடு நடைபெற்றது அனைத்து விமானங்களில் உள்ள கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து சுவாமி அம்மனை வழிபட்டனர்..






