திருப்பத்தூரில் கிளீன் இந்தியா நிகழ்ச்சியில் 47 கிலோ மட்காத பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டது.
02/10/2021 09:15:36pm.
மகாத்மாகாந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு பாரதப்பிரதமர் நரேந்திரமோடியால் அறிவிக்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் இந்த திட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் நேரு யுவகேந்திராவின் மாவட்ட இளையோர் அலுவலர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை திருப்புத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார். திருப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்துடன் இணைப்பு பெற்ற யுவபாரதம் இளையோர் சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேரு யுவகேந்திராவின் வட்டார ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன், யுவபாரதம் இளையோர் சங்கத்தின் ஆலோசகர் போஸ்.முத்துப்பாண்டி, யுவபாரதம் இளையோர் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கேபிள் சண்முகம், பொறியாளர் பொன்னரசு, முத்துக்குமார், வினோத் கண்ணன், மருதுபாண்டியன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தன்னார்வலர்களாக கலந்து கொண்ட திருப்புத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்களிப்புடன் நடைபெற்றது. நடைபெற்ற கிளீன் இந்தியா நிகழ்ச்சியில் 47 கிலோ மட்காத பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டது..






