மகிபாலன்பட்டி ஊராட்சி சார்பாக மருத்துவக்குடி பட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
02/10/2021 08:51:50pm.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டி ஊராட்சி மன்றத்தின் சார்பில் மருத்துவ குடிப்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வெ.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வருவாய் இன்றி ஏழ்மையில் வாடும் குடும்பத்தினரை வறுமைக்கோட்டுக்கு கீழ் இணைத்தல், அரசு உதவிகள் பெற முடியாமல் தவிக்கும் பொதுமக்களின் நலன் கருதி ஆதார் முகாம் கிராமத்தில் அமைத்திட, நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கிராமசபை கூட்டத்தில் திருப்புத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, சத்துணவு அமைப்பாளர் விசாலாட்சி, அரசு செவிலியர், அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், காவல்துறை சார்பு ஆய்வாளர் சேதுராஜன் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் எம் சேகர், வார்டு உறுப்பினர்கள் சக்கரை கனி, முத்துலட்சுமி, எஸ்பி.ராஜு கோவிந்தராஜன், விஜயா, ஸ்ரீதேவி, ராதா, என்.பழனியம்மாள் ஊராட்சி செயலர் உமா, கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன..






