?>
திருப்புத்தூர் அச்சுக்கட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும்கொரோனா விழிப்புணர்வு முகாம்.

08/09/2021 03:23:25pm.

திருப்புத்தூர் அச்சுக்கட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும்கொரோனா விழிப்புணர்வு முகாம். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் நகர் அச்சுக்கட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கைகழுவும் முறை பற்றி குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு அரசு விதிமுறைகள் பின்பற்றி சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திரா தலைமை தாங்கினார். பள்ளியின் எஸ்.எம்.சி துணை தலைவர் சித்தமருத்துவர் ஏ.ராஜாமுகம்மது. கொரோனா விழிப்புணர்வு பற்றி அனைவருக்கும் எடுத்துரைத்தார். கிராம சுகாதார செவிலியர். தீபா தடுப்பூசியின் பலன்களை பற்றி எடுத்துறைத்தார். இறுதியில் எஸ்.எம்.சி தலைவி நன்றி கூறினார்..