மதுரையில் சமூக நல மற்றும் மகளிர் உரிமை ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து மாத துவக்க விழா நடைபெற்றது..
02/09/2021 01:30:10pm.

இரா.பாஸ்கர் செய்தியாளர் மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சமூக நல மற்றும் மகளிர் உரிமை ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து மாத துவக்க விழா மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பைரவி தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற சமூக நல மற்றும் மகளிர் உரிமை ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து மாத துவக்க விழாவில் கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய கர்ப்ப நாட்கள், தாய்ப்பால் நாட்கள், ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரையில் உட்கொள்ள வேண்டிய உணவு, காய்கறிகளால் குழந்தை வளர்ச்சி, ஆரோக்கியம், ஊட்டச்சத்து உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கு சமூக நல மற்றும் மகளிர் உரிமை ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் மேற்பார்வையாளர் அங்கன்வாடி பணியாளர்கள் விளக்கி கூறினர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்..