?>
வேகுப்பட்டி ஊராட்சியில் காவல் ஆய்வாளர் தனபாலன் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது..

02/09/2021 01:29:19pm.

இரா.பாஸ்கர் செய்தியாளர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஊராட்சி பாண்டிமான் கோயில் வீதியில் கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு உத்தரவின்படி மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் அர்ஜூன்குமார் அறிவுறுத்தலின்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் ஆலோசனையின்படி காவல் ஆய்வாளர் தனபாலன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், ஊராட்சித் தலைவர் அர்ச்சுனன்,துணைத் தலைவர் முத்து முன்னிலையில் அப்பகுதி பொது மக்களுக்கு டாக்டர் ரவிக்குமார்உடல் பரிசோதனை மேற்கொண்டார். உடல் பரிசோதனை மேற்கொண்ட பொது மக்கள் மற்றும் காவல் ஆய்வாளர் தனபாலன் ஆகியோருக்கு செவிலியர் மெர்சி தடுப்பூசியை செலுத்தினார். இதில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி, மருந்தாளர், வார்டு உறுப்பினர்கள் அப்துல்கை, செல்வி சண்முகம், கணேசன், அழகி, தேன்மொழி குமார், ஊராட்சி செயலர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..