?>
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

30/08/2021 07:21:44pm.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவில் குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையின் மூலம் கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்களை ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக முதல்வர் அறிவித்து வழங்கிய திட்டத்தின் கீழ் தலா 3 லட்சம் வீதம் 13 குழந்தைகளுக்கும், தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் என 39 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சமூக நலத்துறையின் மூலம் 50 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. பின்பு தோட்டக்கலைத்துறையின் மூலம் 50 பயனாளிகளுக்கு மானியத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதனையடுத்து மாவட்ட தொழில் மையம் மூலம் தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ்15 பயனாளிகளுக்கு மானியத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. பின்பு மாவட்ட வழங்கல் அலுவலகத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவடிவேல், திருப்புத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், திருப்புத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் விராமதி மாணிக்கம், திருப்பத்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தமிழ்நம்பி, ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் சோமசுந்தரம், கண்டவராயன்பட்டி சண். சீமான் சுப்பையா, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்..