?>
வன்னியம்பட்டி ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது..

19/08/2021 05:00:59pm.

இரா.பாஸ்கர் செய்தியாளர்
      புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் வன்னியம்பட்டி ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் நடத்தப்பட்டது.
    ஊராட்சித் தலைவர் செந்தில்குமார் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் ஹிதாயத்பேகம் வரவேற்புரையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குணசீலி வாழ்த்துரையில்  நடைபெற்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி முன்னிலையில் குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் வன்கொடுமை தடுத்தல், குழந்தை தொழிலாளர் அகற்றுதல், பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறிதல் மற்றும் குழந்தை தத்தெடுத்தல் உள்ளிட்டவைகளை பற்றி  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குணசீலி விளக்கிக் கூறினார்.
     இதில் ஊராட்சி செயலர், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, ஆசிரியர்கள், அங்கன் வாடி பணியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப்பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், காவல் துறையின்,குழந்தைகள் நல காவல் அலுவலர், ஆஷா பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள், குழந்தைகள் பராமரிப்பு நிறுவன பிரதிநிதி, பள்ளிக்குழந்தைகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.    மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகப்பணியாளர் சசிகலா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
.