திருப்புத்தூர் அருகே கத்தாழங்காட்டு பகுதியில் கோழி கிடாப்பில் நல்லபாம்பு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
11/08/2021 10:06:33am.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள கத்தாழங்காடு கிராம பகுதியில் (ஆகஸ்ட் 10) நேற்று இரவு 10 மணி அளவில் பழனியப்பன் என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள கோழி கிடாப்பு பகுதியில் திடீரென கோழிகள் அலறல் சப்த்தம் கேட்டு பழனியப்பன் குடும்பத்தினர் வீட்டின் வெளியே வந்து பார்த்துள்ளனர் அப்பொழுது ஏதும் தென்படாத நிலையில் டார்ச் லைட் கொண்டு உற்று கவனித்த போது நல்ல பாம்பு ஒன்று கோழி கிடாப்பில் இருந்தது தெரியவந்தது இதனையடுத்து திருப்புத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு பழனியப்பன் குடும்பத்தினர் தகவல் தெரிவித்து அதன் பேரில் நிலைய அலுவலர் சடையாண்டி தலைமையிலான குழுவினர் கத்தாழங்காட்டு கிராமத்துக்கு விரைந்துச் சென்று பழனியப்பன் வீட்டின் பின்புறம் இருந்த கோழி கிடாப்பில் சுற்றி இருந்த நல்ல பாம்பை பத்திரமாக உயிருடன் மீட்டு திருப்புத்தூர் வனச்சரகத்தில் ஒப்படைத்தனர்
.






