?>
சிலாங்கூர் மற்றும் ஜொகூர் மாநிலத்தில் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் மற்றும் கிரீன் ஸ்டார் பேரரசு நிறுவனம் சார்பில் சலாம் கலாம் ஸ்டார் பசுமை திட்டம் எனும் பெயரில் மரக்கன்றுகள் நடப்பட்டன..

06/08/2021 05:36:24pm.

இரா.பாஸ்கர் செய்தியாளர்
     கோலாலம்பூர் தலைநகர்  சிலாங்கூர் மற்றும் ஜொகூர் மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் மற்றும் கிரீன் ஸ்டார் பேரரசு நிறுவனம் இணைந்து சலாம் கலாம் ஸ்டார் பசுமை திட்டம் எனும் பெயரில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. 
   அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கத்தின் மலேசிய கெளரவத் தலைவர் டாக்டர் அன்பா தலைமையில் இளம் சேவையாளர் தனேஷ் ராஜேந்திரன் ஏற்பாட்டில் சிலாங்கூர்,ஜொகூரை சேர்ந்த பள்ளி மாணவிகள்,சமூக ஆர்வலர்கள் என பலர் தென்னை மரம், மாமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடுவிட்டனர்.
.