சிங்கம்புணரியில் நாடோடிகள் குடும்பத்தாருக்கு தொம்பரர் ஜாதி சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
30/07/2021 11:26:37am.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பங்கேற்றார். இந்நிகழ்வில் மாம்பட்டி பகுதியில் வசிக்கும் நாடோடி கழைக்கூத்தாடி குடும்பத்தாருக்கு ஆதிதிராவிடர் பட்டியலின மக்களுக்கு தொம்பரர் ஜாதி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. கலைக் கூத்தாடிகள் குடும்பத்தினர் 25 பேருக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். தங்களுக்கான ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பத்திருந்த அவர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரடியாக இந்த ஜாதி சான்றிதழ் வழங்கினார். உடன் சார் ஆட்சியர் சிந்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, வட்ட வழங்கல் வட்டாட்சியர் நேரு, சமூக நலத்துறை வட்டாட்சியர் செல்வராணி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.