?>
வாணியம்பாடி பாலாற்றில் வந்த வெள்ளத்தில் சிறுவர்கள் மீன்களை பிடித்து மகிழ்ச்சி

18/07/2021 05:56:27pm.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் தமிழக ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியில் கடந்த 8ம் தேதி இரவு முதல் பெய்த கனமழை காரணமாக நாராயணபுரம், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, ஆவாரம் குப்பம் வழியாக செல்லும் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக பாலாற்றில் இரண்டாவது முறையாக மழை வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் ஏரளாமான மீன்கள் அடித்து வருவதால் அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் ஆற்றுக்குள் இறங்கி மீன்களை பிடித்து மகிழ்ந்து வருகின்றனர். கடந்த பல மாதங்களாக பாலாற்றில் அள்ளிய மணல் கொள்ளையால் ஆங்காங்கே 10 அடி முதல் 15 வரை பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் வெள்ள நீர் தேங்கி இருப்பதன் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் மீன் பிடிக்கும் ஆர்வத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்து வருகின்றனர்..