?>
எஸ்ஆர்டிபிஎஸ் இல்லத்தில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் துரைராஜ் ஆய்வு

08/07/2021 09:45:19pm.

      தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் துரைராஜ் எஸ்ஆர்டிபிஎஸ் இல்லத்தை பார்வையிட்டார். அது சமயம் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது எனவும், இல்லம் தூய்மையாகவும் குழந்தைகளுக்கு ஏற்றவாறு பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
    பின்பு குழந்தைகளிடம் உரையாடிய அவர் குழந்தைகளுக்ககு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்த நிகழ்வி்ல்  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கெஜலட்சுமி உடன் இருந்தார். எஸ்ஆர்டிபிஎஸ் இயக்குநர் தமிழரசி பணி சிறக்க வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து துரைராஜ் அனைத்து மகளிர் காவல்நிலையம், அரசு மருத்துவமனை மாவட்டத்திலுள்ள வேறு சில குழந்தைகள் இல்லங்களையும் ஆய்வு செய்தார்.
.