?>
சிங்கம்புணரி வட்டாரத்தில் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் இணைய தள வழி மூலம் பயிர் பாதுகாப்பு இரசாயனங்களை பாதுகாப்பாக கையாளும் முறைகள் பற்றி விவசாயிகள் பயிற்சி

08/07/2021 02:18:04pm.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு இரசாயனங்களை பாதுகாப்பாக கையாளும் முறைகள் குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி சிங்கம்புணரி விரிவாக்க சீரமைப்பு திட்டம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரையின்படியும் வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) வழிகாட்டுதலின்படியும் இணையவழி மூலம் நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் திருப்புத்தூர், எஸ்.புதூர், சிங்கம்புணரி, கல்லல், ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி கலந்துகொண்டு பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கி அனைவரையும் வரவேற்றார். சிவகங்கை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) பழ.கதிரேசன் இணையவழி மூலம் கலந்து கொண்டு வேளாண்மை துறையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும் இணையவழி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாய பயிற்சிகளைப் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் இணையதள வழி மூலம் டாக்டர்.கார்த்திகேயன் உதவிபேராசிரியர் (தாவர நோயியல்) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பொழுது ஏற்படும் விபத்துக்களை தடுக்க சில பாதுகாப்பு முறைகள் மற்றும் மருந்து தெளிக்கும் பொழுது கையாள வேண்டிய பாதுகாப்பு முறைகள் பற்றி விரிவாக விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். மேலும் பூச்சிகொல்லி மருந்து வாங்கியவுடன் அதன் மேல் ஒட்டப்பட்டுள்ள லேபிளில் உள்ள வழிமுறைகளை கவனமாகப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் பயிர் பாதுகாப்பு கருவிகளை நீண்ட நாட்கள் உழைக்க கையாள வேண்டிய முறைகள் குறித்தும் விரிவாக முறையில் இணையதள வாயிலாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பயிற்சியின் நிறைவு பகுதியில் கலந்து கொண்ட விவசாயிகள் பயிர்பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை இணைய வழி மூலமாக கேட்டு தெரிந்து கொண்டு பயனடைந்தனர். இப்பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கும் தொழில்நுட்பம் வழங்கிய வல்லுநர்களுக்கும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரா.ஜோதி நன்றி தெரிவித்தார் . மேலும் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் மா.சண்முகப்ரியா செய்திருந்தனர்..