ஜோலார்பேட்டை விளையாட்டு மைதானத்தில் வருகின்ற 26ஆம் தேதி காவலர் உடல் தகுதி தேர்வு என மாவட்ட எஸ்பி தகவல்
07/07/2021 05:49:37pm.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர் மற்றும் பெண்கள் காவலர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு சென்று உடல் தேர்வு தகுதி கலந்து கொண்டனர் இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி சிபி சக்கரவர்த்தி திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாவது கண்காணிப்பாளராக பதவி ஏற்ற பிறகு காவலர் தேர்வு நடத்த கடந்த ஒரு மாதமாக இடம் தேர்வு நடைபெற்று வருகின்றது ஜோலார்பேட்டையில் உள்ள இடையபட்டி பகுதியில் விளையாட்டு மைதானத்தில் காவலர் உடல் தேர்வு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் வருகிற 26 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் முறையாக உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது இதில் கயிறு ஏறுதல் உட்பட்ட பல்வேறு விளையாட்டுகள் நடைபெற உள்ளது அங்கு செய்யவேண்டிய ஏற்பாடுகளை நானே நேரில் வந்து ஆய்வு செய்தேன் மையத்திலுள்ள இடங்களை தூய்மைப்படுத்துதல் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என தெரிவித்தார்.






