ஆம்பூரில் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ
05/07/2021 12:50:02am.
திருப்பத்தூர் மாவட்டம் செய்தியாளர் ஏஸ்.எம்.புவனேஸ்வரன் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் வகுப்பு சான்றிதழ்களை வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆ.செ. வில்வநாதன் அவர்கள் வகுப்பு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாதனூர் ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் (கோட்டாட்சியர் பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், ஆசிரியர் குணசேகரன், மற்றும் மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அய்யனூர் அசோகன், இராமமூர்த்தி, சுப்பிரமணி, ரவிக்குமார், தெய்வநாயகம், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் பிரபு, கார்த்திக் ஜவகர், ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள் கோவிந்தராஜ், ஊராட்சி திமுக கழக நிர்வாகிகள் வெங்கடேசன், எத்திராஜ், ஆனந்தன், உமாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். .






