?>
திருப்பத்தூர் சாந்த நகர் சுடுகாட்டில் மின் தகன மேடை அமைக்க மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

05/07/2021 12:43:28am.

திருப்பத்தூர் பாச்சல் பஞ்சாயத்து சாந்த நகரில் உள்ள சுடுகாட்டில் தினமும் சடலத்தை திறந்தவெளி ஏரிமேடையில் எரிப்பதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதியில் எரிக்கும் புகை அப்பகுதி முழுவதும் பரவுவதால் மக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் பல விதமான நோய்த்தொற்று உருவாகும் சூழல் உள்ளது. இதேபோல் இரு சுடுகாடு பகுதியான திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி செல்லும் முக்கிய சாலை பகுதியில் மின் விளக்குகள் கிடையாது மின் விளக்குகள் அமைத்து தந்திடவும் இந்தப் பகுதிக்கு நவீன மின்மயான தகன மேடை அமைத்துத்தந்திட மாவட்ட ஆட்சியருக்கு திருப்பத்தூர் மாவட்டம் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் செயலாளர் எஸ்.எம்.புவனேஸ்வரன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..