?>
மருதிபட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம்

03/07/2021 05:35:48pm.

     சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் எம்.சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மருதிப்பட்டி ஊராட்சி மருதிப்பட்டி கிராம சமுதாயக் கூடத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் மற்றும் covid-19 பரிசோதனை முகாம் பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நபிஷா பானு தலைமையில் டாக்டர் செந்தில்குமார் மற்றும் மருதிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா வெங்கடேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது. இம்முகாமில் சுகாதார மேற்பார்வையாளர் தினகரன், சுகாதார ஆய்வாளர் சாத்தன், ஊராட்சி மன்ற துணை தலைவர் எஸ்.கமலா மற்றும் பிரான்மலை PHC மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 60 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி (கோவிஷீல்டு) போடப்பட்டது. 32 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இம்முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இம்முகாமிற்கு ஏற்பாடு செய்து கொடுத்த மருத்துவ அலுவலர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார். தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மற்ற கிராம பொதுமக்கள் அனைவரும் அடுத்தடுத்து வரும் முகாம்களில் கலந்து கொண்டு கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அனைத்து மக்களும் முக கவசம் அணிய வேண்டும் ‌என்றும் ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா வெங்கடேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

.