?>
சிவகங்கை சீமை படைவீரர்கள் மற்றும் வி.மலம்பட்டி புதிய விடியல் நற்பணி மன்றம் சார்பாக அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பயன்தரு உபகரணங்கள் வழங்கப்பட்டது

02/07/2021 05:23:44pm.

சிவகங்கை சீமை படைவீரர்கள் மற்றும் வி.மலம்பட்டி புதிய விடியல் நற்பணி மன்றம் சார்பாக அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பயன்தரு உபகரணங்கள் வழங்கப்பட்டது வி.மலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் இன்னாள் ராணுவ வீரர்கள் சார்பாகவும் பள்ளிக்கு 12 ஆபிஸ் டேபிள், 2 பீரோ, 15 சேர் சுமார் 50ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கி கொடுத்தனர். இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர் விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை சீமை படைவீரர்கள் தலைவர் ஜான் கென்னடி, துணை தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் கொளரவ தலைவர் லெனின் குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் விழாவின் முடிவில் ராணுவ வீரர் சேவுகன் மற்றும் புதிய விடியல் நற்பணி மன்றம் நிர்வாகிகள் கிராம இளைஞர்கள் நன்றி கூறினார்..