திருப்பத்தூர் சப் கலெக்டராக அலர்மேல் மங்கை பதவியேற்பு
01/07/2021 10:48:19am.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சப் கலெக்டராக இருந்த வந்தனா கார்க் சென்னையில் உள்ள வெட் கோ நிறுவனத்தின் திட்ட அலுவலராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பணிமாறுதல் பெற்று சென்றார். அதன் பிறகு கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் பொறுப்பு உதவி கலெக்டராக பணியாற்றி வந்தார் இந்நிலையில் கடந்த 25.06.2021 வெள்ளிக்கிழமை அன்று தமிழகக அரசு திருநெல்வேலியின் பயிற்சி கலெக்டர் ஆக பணியாற்றிவந்த அலர்மேல் மங்கையை திருப்பத்தூர் சப் கலெக்டராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இன்று அவர் திருப்பத்தூர் சப் கலெக்டராக பொறுப் பெற்றுக்கொண்டார்..






