?>
திருப்பத்தூர் மாவட்டம் ரகுபதியூர் அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை திமுக எம்எல்ஏ நல்லதம்பி வழங்கினார்

26/06/2021 03:58:14pm.

    திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட உடையாமுத்தூர் ஊராட்சி ரகுபதி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  2021 மற்றும் 2022 கான விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு கந்திலி வட்டார கல்வி அலுவலர் சித்ரா தலைமையில் நடைபெற்றது.
     இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் நல்லதம்பி கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் கந்திலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அன்பழகன் திமுக நிர்வாகிகள் குணசேகரன் ராஜா மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தசரதன் உட்பட பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்
.