?>
பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

25/06/2021 04:09:05pm.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் 30 நாள் பரோலில் தனது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட இடையம்பட்டி பகுதியில் அவரது வீட்டில் தங்கி உள்ள நிலையில் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 11 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிட வளாகத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் பேரறிவாளனுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டது அதன்பின் அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.