?>
வாணியம்பாடி அருகே பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பணியின் போது மூச்சி திணறல் ஏற்பட்டு மரணம்

20/06/2021 10:41:53pm.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் மணி( வயது 60). இவரது சொந்த ஊர் ஒடுகத்தூர் ஆகும். இவர் ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் கொரோனா பராமரிப்பு பணிகளை மேற் பார்வையிட்டுக் கொண்டிருந்தார், அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது, உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன்யின்றி மரணம் அடைந்தார். இறந்துபோன மணிக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர், இவர் வருகின்ற 30ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் சுகாதாரத் துறை பணியாளர்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் போது மரணம் அடைந்து வருவது சுகாதார பிரிவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..