ஜோலார்பேட்டை அருகில் ரூ.2000 மற்றும் 14 அத்தியாவசிய மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு தேவராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.
19/06/2021 01:45:10pm.
K. வினாயகமூர்த்தி. ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே புதூர், ஊசிநாட்டான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் 2-ம் கட்ட கொரோனா நிவாரண தொகையாக தலா ரூ.2000 மற்றும் 14 அத்தியாவசிய மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் திமுக மாவட்ட பொறுப்பாளர் ம.முத்தமிழ்ச்செல்வி, ஜோலார்பேட்டை நகர பொறுப்பாளர் ம.அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் பூ.சதாசிவம் மற்றும் நகர் கழக நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.






