நாட்றம்பள்ளி அருகே 4 டன் ரேஷன் அரிசி கடத்தல் : வருவாய் துறையினர் பறிமுதல்
18/06/2021 04:57:12pm.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா பச்சூர் அடுத்த சென்றாயசுவாமி கோயில் அருகில் சுமார் 4 டன் ரேசன் அரிசியை கடத்துவதாக ரகசிய தகவலின் அடிப்படையில் நாட்றம்பள்ளி தாசில்தார் மகாலட்சுமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் நந்தினி வட்ட வழங்கல் அதிகாரி நடராஜன் ஆகியோர் பச்சூர் விரைந்து சென்று கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தில் இருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம் அனுப்பி வைக்கப்பட்டது..






