?>
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு வழங்க கோரி காதல் ஜோடி தஞ்சம்.

16/06/2021 08:18:07pm.

‌‌திருப்பத்தூர் மாவட்டம் செய்தியாளர் ஏஸ்.எம்.புவனேஸ்வரன்
     திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்த  ஜெயசீலன்(56) ஹோமியோபதி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் பிரியதர்ஷினி (23)  இவர் ஆம்பூர் அடுத்த மோதகப்பள்ளி கோவில் தெரு பகுதியை சேர்ந்த அருண்குமார் மகன் நவீன்குமார்(23) என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இரு வீட்டார் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்க கடந்த 13-ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
    அதனைத் தொடர்ந்து பிரியதர்ஷனின் பெற்றோர்கள் ஆம்பூர் காவல் நிலையத்தில் தன்னுடைய பெண் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்துள்ளனர்.  ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் காரணமாக  பிரியதர்ஷினி தனது பெற்றோர்கள் கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது. நான் காணாமல் போகவில்லை காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு உள்ளேன்.
     மேலும்  தனக்கும் தனது கணவரான நவீன் குமார் மற்றும் அவருடைய பெற்றோர்களுக்கும் அடியாட்களை வைத்து மிரட்டுவதாக தெரிவித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு வழங்கக்கோரி புகார் மனுவையும் வழங்கி தஞ்சம் அடைந்துள்ளார்.  
 
.