?>
ஜோலார்பேட்டை புகைப்பட கலைஞர்கள் நல சங்கம் சார்பில் நகராட்சி ஆணையரிடம் மனு

15/06/2021 02:47:13pm.

K. வினாயகமூர்த்தி. ஜோலார்பேட்டை.
     திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள ஜோலார்பேட்டை புகைப்பட கலைஞர்கள் நலசங்கம் சார்பில் தளர்வுகளுடன் கூடிய இந்த ஊரடங்கு காலத்தில் புகைப்பட கடைகளை திறக்க அனுமதி கோரி நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளனர் இதில் அவர்களுடைய வீட்டு வாடகை, கடை வாடகை, எங்கள் குழந்தைகளின் கல்வி செலவு, புகைப்பட கருவிகள் வாங்க நாங்கள் பெற்ற கடன்களை அடைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் எங்களுக்கு இந்த ஊரடங்கு நாட்களில் கடைகளை திறக்க அனுமதிக்குமாறு ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனர். இதில் ஜோலார்பேட்டை புகைப்பட கலைஞர்கள் நல சங்க தலைவர் மதிவாணன், செயலாளர் வினாயகமூர்த்தி, பொருளாளர் கலைவாணன் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்
 
 
.