?>
ஜோலார்பேட்டை நகராட்சிக்கு! பொதுமக்கள் வேண்டுகோள்

15/06/2021 12:04:22am.

ஜோலார்பேட்டை நகராட்சி 15வது வார்டில் குரங்குகளின் தொல்லை குறித்து கடந்த 30ம் தேதி பொதுமக்களால் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நகராட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குரங்குகள் தொல்லை அதிகம் உள்ளாதாலும் வீட்டிற்குள் நுழைந்து எல்லா பொருட்களையும் நாசம் செய்வதாலும் விரட்ட சென்றால் கடிக்க வருவதால் குரங்குகள் முலம் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கே.வினாயகமூர்த்தி. ஜோலார்பேட்டை..