?>
கொரோனா நிவாரண நிதி 2 ம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்.

14/06/2021 11:56:58pm.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 2 ம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வருவாய்த்துறை, ஊராக வளர்ச்சி துறையில் 5 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குதல், மூன்றாம் பாலினத்தவர் 343 பயனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி 2000 வழங்கும் விழாவினை காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் நிர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன் தலைமை தாங்கினார் வேலூர் மத்திய மாவட்ட செயலாளரும் அனணக்கட்டு சட்டமன்ற உறுப்பினரமான நந்தகுமார் முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சியில் வேலூர் மத்திய மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி வாழ்த்துரையாற்றினார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜியன் மற்றும் மாவட்ட, மாநகர நகர, ஒன்றிய நிர்வாகிகள் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்..