?>
வாணியம்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி விற்பனையில் ஈடுபட்ட 5 கடைகளுக்கு சீல்

12/06/2021 05:21:24pm.

வாணியம்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி கடைகளை திறந்து விற்பனையில் ஈடுபட்ட 5 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அரசு விதிகளை பின்பற்றாமல் அதிகளவு ஆட்களை ஏற்றி சென்ற காலணி தொழிற்சாலை வாகனங்கள் இரண்டுக்கு தலா ஆயிரம அபராதம் விதித்து வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். கொரோனா பெருந் தொற்றின் தாக்கத்தை கட்டுபடுத்த தமிழக அரசு குறிப்பிட்ட அத்தியா வசிய கடைகளுக்கு மட்டுமே திறந்து விற்பனையில் ஈடுபட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் ஊரடங்கு காலத்தில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி. எல்.சாலை, ஜின்னா சாலை, முகமது அலி பஜார் உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு காலத்தில் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ள காலணி கடை, பேன்சி ஸ்டோர், ஜவுளிக்கடை, பிரின்டிங் ஆப்செட் பிரஸ் ஆகியவை இயங்கி வந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வட்டாட்சியர் மோகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் 5 கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் சி.எல் சாலை வழியாக தனியார் காலணி தொழிற்சாலைக்கு அரசி விதிகளை பின்பற்றாமல் அதிக தொழிலாளர்களை ஏற்றி வந்து இரண்டு வாகனங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அரசு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்..