பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆம்பூர் நகர காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
11/06/2021 04:31:10pm.
திருப்பத்தூர் மாவட்டம் செய்தியாளர் ஏஸ்.எம்.புவனேஸ்வரன்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆணைக்கிணங்க நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் சரவணன் தலைமையிலும், மாவட்ட தலைவர் பிரபு, மாநில செயலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட பொருளாளர் மகேஷ், நகர,ஒன்றிய நிர்வாகிகள் சங்கர், கோகுல வாணன், குமரேசன், ராஜசேகர், சலாவுதீன், முனீர், சுபேர் அஹமத், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மருத்துவ பிரிவு ஜான் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர்.






