?>
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன்அருள் தலைமையில் நடைபெற்றது

11/06/2021 03:46:21pm.

     திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர்  ம.ப.சிவன்அருள் தலைமையில் நடைபெற்றது . மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அலுவலர்களும் இதில் கலந்துகொண்டனர்.
     இந்நிகழ்வில் குழந்தைத் தொழிலாளர்களாக மீட்கபட்டவர்களின் குடும்பத்திற்கு SRDPS பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்லம் சார்பாக அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் 10 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
     இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  தங்கைய்யா பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தவில்சன் ராஜ சேகரன்,பேரிடர் மேலான்மை வட்டாச்சியர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.நிவரணப் பொருட்களை SRDPS இயக்குநர் தமிழரசி மாவட்டயரிடம் வழங்கினார்.
       இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஏற்படுசெய்திருந்தார்.
.