?>
திருப்புத்தூர் தவ்ஹீத் ஜமாத் சார்பாக கொரோனவால் மரணமடைந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

07/06/2021 11:36:49am.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் மூன்று குடும்பங்களுக்கு திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி பகுதியில்,மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூபாய்2000 மதிப்புள்ள மளிகை பொருட்கள்,அரிசி, மற்றும் காய்கறி இலவசமாக வழங்கப்பட்டது. திருப்பத்தூர் தவ்ஹீத் ஜமாத் கிளைத் தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமையில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. செயலாளர் ஜஹாங்கிர், பொருளாளர் சேக் அபுதாஹிர் , துணைத் தலைவர் மற்றும் தொண்டர் அணியினர் உடனிருந்தனர்..