?>
ஆம்பூரில் 100 ஆக்சிசன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

04/06/2021 07:10:21pm.

திருப்பத்தூர் மாவட்டம் செய்தியாளர் ஏஸ்.எம்.புவனேஸ்வரன்
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஆம்பூர் வர்த்தக மையக் கட்டிடத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 100 ஆக்ஸிஜன் செரிவூட்டிகள் கொண்ட படுக்கை மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியம் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  ஆர்.காந்தி வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த்  திருவண்ணாமலை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்
ஏ.அண்ணாதுரை  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம. ப. சிவனருள்  திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்  கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜ் திருப்பத்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி ஆம்பூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் ஆ.செ. வில்வநாதன் 
ஆம்பூர் வட்டாட்சியர் ஆனந்த கிருஷ்ணன் ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் சௌந்தரராஜன் ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் 
ஆம்பூர் காவல் ஆய்வாளர் திருமால் மற்றும் ஆம்பூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகரச் செயலாளர்  எம். ஆர்.ஆறுமுகம்  நோய் தொற்று ஏற்படும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது 
கொரோனா நோயின் முதல் அலை சரி செய்ய ஒரு ஆண்டு ஆனது இரண்டாவது அலையை திராவிட முன்னேற்ற கழகத்தின் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்த ஒரு மாதத்திலேயே இரண்டாவது ஆலை நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் 
மா. சுப்பிரமணியன் தெரிவித்தார் விரைவில் நோய்த் தொற்று இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி அமைப்போம் அதற்காக அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொண்டார்.             
.