திருப்புத்தூர் காந்திநகர் பகுதியில் உலக ஒருங்கிணைந்த மதநல்லிணக்க குழு சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்
03/06/2021 04:02:21pm.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் காந்திநகர் பகுதியில் உலக ஒருங்கிணைந்த மதநல்லிணக்க குழுவின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் உலக ஒருங்கிணைந்த மதநல்லிணக்க குழு நிறுவன தலைவர் எம் கே எம் ரபீக் தலைமையில் பிரச்சாரம் மேற்கொண்டனர் பிரச்சாரத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வுகள் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்புத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் பொன்.ரகு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் திருப்புத்தூர் வட்டார வருவாய் ஆய்வாளர் செல்வம், தொழிலதிபர் பிரான்சிஸ் அந்தோணி, திமுக வார்டு பிரதிநிதி ஸ்டீபன் உலக ஒருங்கிணைந்த மதநல்லிணக்க குழு மகளிர் அணி நிர்வாகி முத்துலட்சுமி இளைஞரணி இம்தாதுல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






