தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 400 கோடி ரூபாய் ஊழல் : சிங்கம்புணரியில் விடியலை நோக்கி பிரச்சாரக்கூட்டத்தில் கனிமொழி எம்பி குற்றச்சாட்டு.
25/01/2021.
சிங்கம்புணரி :
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஸ்டாலின் அவர்களின் விடியலை நோக்கி நிகழ்வுக்காக கனிமொழி எம்பி சிவகங்கை மாவட்டத்தில் தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சிங்கம்புணரியில் நடைபெற்ற பிரமாண்ட மேடையில் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு மத்தியில் தனது உரையை நிகழ்த்தினார். அப்பொழுது தமிழகத்தில்100 நாள் வேலை திட்டத்தில் 400 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் பேசும் பொழுது கிராமப் புறத்தில் இருப்பவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் நூறு நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் 100 நாள் வேலை கிடையாது. சம்பளம் சரியாக போடுவதில்லை. இரண்டு மாதங்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சம்பளம் போட்டாலே பெரிய விஷயமாக உள்ளது. அதிலும் பொய்க்கணக்கு. சேலத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டதற்கு கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்க்கும் மேலாக அதில் ஊழல் நடந்துள்ளதாக கூறினார். பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளது 10 பேர் வேலை செய்தால் 50 பேர் வேலை செய்ததாக கணக்கு. சம்பளம் சரியாக வழங்கப்படாமல் கொடுத்ததாக கணக்கு. செய்யாத வேலைக்கு செய்ததாக பொய்க்கணக்கு இவ்வாறாக 400 கோடிக்கு மேலாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
நிகழ்ச்சியில் திருப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன், மற்றும் ஒன்றியச்செயலாளர் பூமிநாதன், சிவபுரி சேகர், மனோகரன், சோமசுந்தரம், குடவுன்மணி, அம்பலமுத்து, நகரச்செயலாளர் யாகூப், மனப்பட்டி பாஸ்கரன், மற்றும் ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
.






