சங்கம்பட்டி கிராம மக்களுக்கு முட்டை, சுண்டல், முககவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..
21/05/2021 12:47:49pm.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை ஊராட்சியில் சங்கம்பட்டி கிராம பொது மக்களுக்கு பொன்னமராவதி வட்டார வயலக சார்பில் முட்டை, சுண்டல், முககவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க பொது மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்திக்காக முட்டை, சுண்டல், கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினர். இதில் வட்டார வயலக ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டியன், செயலாளர் சுந்தர்ராஜ், செயற்குழு உறுப்பினரும் மறவாமதுரை கவுன்சிலருமான பழனியாண்டி உள்ளிட்டோர் உடனிருந்து கபசுர குடிநீரை வழங்கினர். மேலுன் இதற்கு முன்பு பொன்னமராவதி வட்டார வயலக சார்பில் கருகப்பூலான்பட்டி, மலையடிபட்டி,மலம்பட்டி, ஏனாதி, பிடாரம்பட்டி,சங்கம்பட்டி, நெறிஞ்சிக்குடி ஆகிய கிராமங்கள் என இரண்டாயிரம் நபர்களுக்கு முட்டை,சுண்டல்,முககவசம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..






