பொன்னமராவதி ஒன்றியத்தில் கொரோனோ வைரஸ் நோய் தொற்று தடை செய்யப்பட்ட பகுதியை சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்..
18/05/2021 05:56:01pm.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் பல்வேறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனோ வைரஸ் நோய் தொற்று தடை செய்யப்பட்ட தடுப்பு வேலியை மருத்துவர்கள் பார்வையிட்டனர். நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமகேஸ்வரி உத்தரவின்படி மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் கலைவாணி அறிவுறுத்தலின்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் காரையூர், கோவனூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட கொரோனோ வைரஸ் நோய் தொற்று தடை செய்யப்பட்ட பகுதியை பார்வையிட்டனர். இதில் டாக்டர் ரவிக்குமார், சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், காரையூர் ஊராட்சி மன்றத் தலைவர் இக்பால் ஆகியோர் உடனிருந்தனர்..






