?>
மாந்தக்குடிபட்டி கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை : கிராம மக்கள் பாராட்டு..

15/05/2021 07:31:02pm.

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் மாந்தக்குடிபட்டி கிராமத்தில் கால் தவறி கிணற்றில் விழுந்த கன்றுகுட்டி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர். அஞ்சுபுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அங்குதன் மகன் அங்குதன் என்பவரின் விவசாய கிணறு மாந்தக்குடிபட்டி கிராமத்தில் உள்ளது. இக்கிணற்றில் அங்குதனின் கன்றுக்குட்டி கால் தடுமாறி கிணற்றில் விழுந்தது கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை பார்த்த அங்குதன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனர். கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை விரைந்து வந்து மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அங்குதன், மாந்தக்குடிபட்டி கிராம மக்கள் பாராட்டு மற்றும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்..